To increase computer speed

http://www.radarsync.com/installers/radarsync.exe

nokia website

http://store.ovi.com

மதிப்பு மிக்க மென்பொருட்கள் ஒவ்வொரு நாளும் இலவசம்

ரையல் பதிப்புகளை வெளியிடாமல் ஒரிஜினல் பதிப்பையே இலவசமாகவும், சட்டரீதியாகவும் வெளியிடுகிறார்கள். அந்த மென்பொருளில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல், முழுமையான பயன்பாடாக இருப்பதால் நமக்கு நன்மையே.தள முகவரி :http://www.giveawayoftheday.com/

Post owner:Tamilnenjam

பூட்டப்பட்ட PDF ஐ திறப்பது எப்படி?

5 எம்பி வரை உள்ள பிடிஎப் கோப்புகளை http://www.ensode.net/pdf-crack.jsf தளத்தில் ஏற்றினால், அதன் பூட்டை இலவசமாகவே நீக்கித் தருகிறார்கள். இந்தத்தளத்தில் ஏற்றி இறக்கினால் காப்புரிமை செய்யப்பட்ட பிடிஎப் கோப்பானது காப்புரிமை நீக்கப்பட்டு உங்களுக்குக் கிடைக்கும். அதைத் தனியாக இணையிறக்கம் செய்துகொள்ளலாம்.
Postowener:Tamil nenjan

நெருப்பு நரியின் வேகத்தை இன்னும் இன்னும் இன்னும்…

மற்ற எல்லா உலவிகளையும் விட நெருப்பு நரி பாதுகாப்பானதாகவும், வேகம் அதிகமானதாகவும் இருந்தாலும் அதன் வேகத்தை இன்னும் அதிகரிக்கச் செய்வதற்காக ஒரு மென்பொருள் உண்டு.
பெரிய பெரிய வல்லுநர்களால் சோதனை செய்யப்பட்டு தகுதிச்சான்றிதழைப் பெற்றுள்ளது இந்த மென்பொருள்.
நீங்களாகவே நெருப்பு நரியின் வேகத்தை இன்னும் அதிகரிக்கலாம். ஆனால் அது உங்களது பொன்னான நேரத்தை விழுங்கும்.

முதன்முறையாக இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு அது ஒரு சவாலே.
நெருப்பு நரி உலவியானது சாதாரணமாக 40 எம்பி அளவிலான நினைவகத்தை ஆக்கிரமிக்கும்.
இந்த மென்பொருளைப் பயன்படுத்தியபிறகு அது வெறும் 100 முதல் 200 கேபி வரையிலேதான் ஆக்கிரமித்தது. டாஸ்க்மேனேஜரே தெரிவித்த விசயம் இது.
சிஸ்டம் டிரேயில் எல்லாம் இந்த மென்பொருள் அமராது. இதன் பெயர் ஃபயர் ட்யூன் ( FireTune )
http://dl.totalidea.com/files/public/firetune.zip

Post owner:Tami nenjam

இசைக்கருவிகளுக்கான இலவச மென்பொருட்கள்

நம்மில் பலருக்கும் இசையார்வம் அதிகம் உண்டு. கணினியில் இசைக்கருவிகளான ட்ரம்ஸ், வயலின், கீபோர்ட் இவற்றுக்கான மென்பொருட்கள் இருப்பின் நமது ஆர்வத்தை, விருப்பத்தை அதில் ஈடுபடுத்தி இன்னும் திறமையைக் காட்டலாம்.இணையத்தில் தேடியதில் சில Flash Application களைக் கண்டேன். டிரம்ஸ், வயலின், கீபோர்ட் இவற்றிற்கான ப்ளாஷ் அப்ளிகேசன்ஸ் இவை. இவற்றைத் தனியாக தரவிறக்கம் செய்து இணைய இணைப்பின்றியும் இசையமைத்து புதுசா பட்டையைக் கிளப்பலாம்.உங்கள் கணினியின் keyboard, mouse வாயிலாக கீழே உள்ள musical keyboard ஐ இசைத்துப் பாருங்கள். காதில் headset ஐ அணிந்து கேட்டுப் பாருங்கள்.
http://www.buttonbeats.com/

post owner :tamil nenjam

மொபைல் வழி இணைய மேய்ச்சலின் வேகத்தை அதிகரிக்க

கற்றோற்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு" - அது போல "உலவத் தெரிந்தவருக்கு செல்போன் இருக்குமிடம் கூட சொர்க்கம்."
உங்களது செல்பேசிக்காண இணைய இணைப்பு மிகவும் வேகம் குறைந்ததாக உள்ளதா?பக்கங்கள் திரையில் லோட் ஆவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதா?உங்களுக்கு உதவுவதற்காகவே http://www.mobtimizer.com/ உள்ளது.மொபைல் போன் @ செல்பேசிகள் வழியாக இணைய உலவுதலை துரிதப்படுத்துகிறது.
Do you want to increase the browsing speed for your mobile phone?ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் எக்கச்சக்கமாக படங்களும், விளம்பரங்களும்வருவதாக வைத்துக்கொள்வோம். அந்தத்தளத்தை மொபைல் உலவி வாயிலாக ப்ரவுசிங்செய்தால், பக்கங்கள் லோட் ஆகுவதற்கு நீண்ட நேரம் பிடிக்கும்.நமக்கு அந்த தளத்தில் உள்ள செய்திகள் வேகமாக தரவிறக்க வேண்டும்.படங்கள் வேண்டவே வேண்டாம் - எனக் கருதினால் உங்கள் செல்போனில் http://www.mobtimizer.com/ தளத்தில் நுழைந்துஅங்கே தேவையான தளத்தின் URL முகவரியை உள்ளிட்டாலே போதும்.

Post owner:Tamil nenjam

யு.எஸ்.பி கருவிகளும் ஆட்டோரன் மால்வேர்களும்

யு.எஸ்.பி கருவிகளும் ஆட்டோரன் மால்வேர்களும்தற்போதைய காலகட்டங்களில் கணினிப் பயனர் அல்லாதோர் கூட ஒரு சிறு நினைவகக் கருவியைத் (memory device - backup storage) தன்னுடன் வைத்திருக்கின்றனர். இதை ஒரு fashion ஆகப் பாவிக்கின்றனர். இந்த நினைவக ஃப்ளாஷ் கருவியில் Autorun.inf என்னும் ஒரு கோப்பின் மூலம்தான் பல்வேறு தீச்செயல்கள் (threats) ஒரு கணினியில் இருந்து வேறு கணினிக்குப் பரவுகின்றன(spread).இந்த Autorun.inf என்பது தானியங்கித் தனமாக சில காரியங்களை USB கருவியில் இருந்து பிற கணினிக்கு பரப்பி விடும். இதனால் பல்வேறு தகவல்கள் திருடப்படுவதற்கோ, அழிக்கப்படுவதற்கோ வாய்ப்புள்ளது.இதைத் தடுப்பதற்காக AutoRun Eater என்கிற மென்பொருளைப் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை நிறுவிய பிறகு - அது கணினியில் ஓடிக்கொண்டே (background process) இருக்கும்.எப்போதாவது தீங்கு விளைவிக்கக்கூடிய யுஎஸ்பி கருவியின் ஆட்டோரன் கோப்பை இது கண்டால் , உடனே அதைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்துவிடும்.Softpedia certifies this application is 100% clean from spyware, malware, virues.

http://www.softpedia.com/get/Security/Secure-cleaning/Autorun-Eater.shtml

Post owner:Tamil nenjam

Mathcast Powerful Mathematics Equation Editor

It is very tough to create maths equation using classic editors. Those editors are not having good facility to do it.Mathcast is a freeware application for creating complex mathematics equations in seconds. We can easily create any kind of complex maths equations using it.Files created by using Mathcast are Microsoft Office, Open Office compatible.We can export Mathcast files into JPG type of images.We can take smooth printouts, screen cast using this application without any difficulty.Do you want to download Mathcast?
http://mathcast.sourceforge.net/home.html

Post owner:Tamil nenjam
http://techintamil.blogspot.com

கணினியில் USB Drive களை முடக்குவது எப்படி?

கணினியில் USB Drive களை முடக்க வேண்டிய நிர்பந்தம் எப்போது ஏற்படும் என்பதனை பார்ப்போம். கணினியில் வைரஸ் நுழைவதற்கான நுழைவாயில் பெரும்பாலும் USB Drive கள் தான். ஒன்றிற்கு மேற்பட்டோர் கணினியை உபயோகிக்கும் போது அனைவரும் USB Drive களை பயன்படுத்துவது தவிர்க்க இயலாதது.இல்லத்திலோ, அலுவலகங்களிலோ , ப்ரொவ்சிங் சென்டெர் போன்ற இடங்களிலோ கணினி பற்றி அதிகம் அறியாதோர் தவறுதலாக வைரஸ் உள்ள USB Device மூலம் கணினிக்குள் வைரஸ் புகுத்தி விட வாய்ப்பு உண்டு.நம்முடைய கணினியில் உள்ள விவரங்களை நாம் கணினியில் இல்லாத நேரம் பிறர் சில நிமிடங்களில் USB காப்பி செய்து எடுத்து விடும் அபாயமும் உண்டு. இது போன்ற தருணங்களில் கணினியில் உள்ள USB Drive களை முடக்கி (Disable) செய்து வைக்க வேண்டிய கட்டாயம் வரும்.கணினியின் BIOS Settings சென்று USB Port Disable செய்யலாம். ஆனால் அது நாம் USB Mouse, USB Keyboard, USB Printer போன்றவற்றை உபயோகித்தால் அவற்றையும் முடக்கி விடும்.USB Storage Device களை மட்டும் முடக்க வேண்டும். இதனை மூன்று வழிமுறைகளில் செய்யலாம்.Start பட்டனை கிளிக் செய்து Run கிளிக் செய்யுங்கள். அதில் regedit என்று கொடுத்து எனத் தட்டுங்கள். Start --> Run --> regedit . ரெஜிஸ்டரி எடிட்டர் தோன்றும். அதில் HKEY_LOCAL_MACHINE --> SYSTEM --> CurrentControlSet --> Services --> UsbStor செல்லுங்கள். வலது புறம் வரும் ஆப்சன்களில் "Start" என்பதனை டபுள் கிளிக் செய்யுங்கள்.தோன்றும் விண்டோவில் "Value Data" என்பதில்நீங்கள் USB Storage Drive களை Disable செய்ய விரும்பினால் "4" என்று கொடுக்கவும். USB Storage Drive களை Enable செய்ய விரும்பினால் "3" என்று கொடுக்கவும். ரெஜிஸ்டரி எடிட்டரை மூடி விட்டு கணினியை Reboot செய்யவும். உங்கள் தேர்வின்படி USB Storage Drive enable/disable ஆகும்.இந்த முறை உங்களுக்கு கடினமானதாக தோன்றினால் ஒரு எளிய முறையை பார்ப்போம். கீழ்காணும் இரண்டு கோப்புகளையும் தரவிறக்கி கொள்ளுங்கள்.USB Storage Drive களை Enable செய்ய - EnableUSBDrive.regUSB Storage Drive களை Disable செய்ய - DisableUSBDrive.regஉங்கள் தேவைக்கான கோப்பை ஓபன் செய்தால் USB Enable / Disable ஆகும்.மற்றுமொரு வழிமுறையும் உண்டு. ஒரு இலவச மென்பொருள் மூலம் இதனை செய்யலாம். இந்த மென்பொருளை இங்கே கிளிக் செய்து பெற்று உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.வேண்டுமென்ற ஆப்சனை தேர்வு செய்து உங்கள் தேவையை நிறைவேற்றி கொள்ளுங்கள். மேற்சொன்ன முறைகள் விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000, விண்டோஸ் 2003, விண்டோஸ் விஸ்டா , விண்டோஸ் 28, விண்டோஸ் 7 உள்ளிட்ட விண்டோஸ் இயங்குதளங்களில் வேலை செய்யும்.

மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க

இணையத்தில் பதிவுகளை வாசித்து கொண்டிருக்கும் போது பதிவர் டாக்டர். புருனோ அவர்களின் பயணங்கள் பிளாக்கில் மொபைல் போனில் அவர் பிளாக்கை பார்ப்பது பற்றி எழுதியிருந்த இடுகை கண்ணில் பட்டது.முன்பு என்னுடைய சோனி எரிக்சன் மொபைலில் தமிழ் தளங்களை பார்ப்பதில் எழுத்துரு பிரச்சினை இருந்தது. ஆர்வம் இல்லாததால் அத்துடன் விட்டு விட்டேன். இப்போது மீண்டும் முயன்ற போது அதே எழுத்துரு பிரச்சினை. தமிழ் இணைய தளங்களின் தமிழ் எழுத்துகள் சரியாக தெரியவில்லை.புருனோ அவர்களின் இடுகையின் பின்னூட்டத்திலேயே பதிவர் மின்னுது மின்னல் இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு உதவி லிங்க் தந்து இருந்தார். அதன்படி உபயோகித்து பார்த்தேன். தமிழ் எழுத்துரு பிரச்சினை தீர்ந்து விட்டது. மேலும் இது போன்ற பிரச்சினை உள்ள பலரை சென்றடையட்டும் என்று இங்கு பகிர்கிறேன்.மொபைலில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை 1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினி தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.இனி உங்கள் மொபைலில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றியும் பார்க்கலாம்.இது எனக்கு எவ்வித தடை இன்றி வேலை செய்தது. வேறேதும் வழிமுறைகள் இருந்தால் பின்னூட்டத்தில் கூறுங்கள்.எனது இந்த பிளாக்கை நீங்கள் உங்கள் மொபைலில் இருந்து கீழ்க்கண்ட முகவரிகளில் எளிதாக வாசிக்கலாம்.http://bit.ly/tvs50 OR http://www.google.com/reader/m/view/feed/http://feeds2.feedburner.com/tvs50 OR http://feeds2.feedburner.com/tvs50 OR http://tamilnutpam.mofuse.mobi/உபயோகித்து பாருங்கள். குறைகள் ஏதேனும் இருந்தால் சுட்டி காட்டுங்கள். என்னை திருத்திக்கொள்ள உதவியாய் இருக்கும்.

Post owner:http://tvs50.blogspot.com

ஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்க

முதலில் பார்டிசன் என்றால் என்ன என்பதை பார்ப்போம். கணினியில் உள்ள ஹார்ட்டிஸ்க் பெரிய கொள்ளளவில் வரும் போது அதனை நம் வசதிக்கேற்ப வெவ்வேறு அளவுகளில் பல பகுதிகளாக பிரித்து கொள்ளலாம். அதுதான் பாடிசன் எனப்படுகிறது. புரியும் படி சொல்ல வேண்டுமெனில் கணினியில் ஹார்ட்டிஸ்க் 80GB அளவுள்ளதாக கொள்வோம். அதனை நம் பயன்பாட்டுக்கு C: - 20GB , D: - 30GB , E: - 30GB என்று வேண்டிய அளவுகளில் பிரித்து கொள்ளலாம். உபயோகிக்கும் போது C: - இயங்குதளம் , D: - மென்பொருள்கள் , E: - பாடல்கள் , வீடியோ என்று சேமித்து விருப்பப்படி உபயோகித்து கொள்ளலாம்.பெரும்பாலும் இவை நீங்கள் கணினி வாங்கும் போதே செய்யப்பட்டு வந்து விடும். இதில் எனக்கு ஒரு பிரச்சினை தோன்றியது. C: -ல் 20GB மட்டும் இருந்ததால் நிறுவும் மென்பொருள்களால் நிறைந்து நாளடைவில் Disk is full என்று வந்து விட்டது. D: -ல் அதிகமான இடம் இருந்தாலும் அதனை C: -க்கு நகர்த்துவது கடினமான காரியம்.இது போன்ற தருணங்களில் முன்பு FDISK எனும் DOS டூலை உபயோகித்து வந்தேன். மொத்த ஹார்ட்டிஸ்க்கையும் திரும்ப பிரித்து C: அதிகமாகவும் D: , E: அளவு குறைவாகவும் நிறுவ வேண்டி இருந்தது. இந்த டூலை உபயோகிக்கும் போது ஹார்ட்டிஸ்க்கில் இருந்த அனைத்து தகவல்களும் அழிந்து விடும். மீண்டும் format செய்து புதியது போல் இயங்குதளம் நிறுவி உபயோக படுத்த வேண்டி இருக்கும். :(ஆனால் Easeus Partition Master மென்பொருளை அறிந்து கொண்ட பிறகு இந்த வேலை மிக எளிதாயிற்று. இதன் மூலம் எளிய வழி முறைகள் மூலம் பார்டிசன் அளவுகளை கூட்டலாம் / குறைக்கலாம். பார்டிசன்களை அப்படியே காப்பி செய்து கொள்ளலாம். புதிய பாடிசன்களை உருவாக்கலாம். பார்டிசன்களை நீக்கலாம். ஏற்கனவே உள்ள பார்டிசன்களை இரண்டாக பிரிக்கலாம். மேலும் பல வசதிகள் உள்ளன. பார்டிசன்களை Format செய்து கொள்ளலாம்.இவை அனைத்தையும் உங்கள் ஹார்ட்டிஸ்கில் எவ்வித தகவல் இழப்பும் (Data Loss) இன்றி செய்ய முடியும். இந்த மென்பொருள் இல்ல பயனர்களுக்கு (Home Use) முற்றிலும் இலவசம். இதனை இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இது விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 இயங்குதளங்களில் இயங்கும்.

Post Owner:TVS50
http://tvs50.blogspot.com